Toronto Healthcare Clinic

டொரோன்டோ ஹெல்த்கேர் கிளினிக் வாகன விபத்துக்கள் மற்றும் தனிப்பட்ட காயத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், மற்றும் தீவிரமான அல்லது நீண்டகால நிலைமைகளின் காரணமாக ஏற்படும் வலி மற்றும் செயல்பிறழ்ச்சியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் முழுமையான பல்துறை சிகிச்சைத் திட்டங்களை வழங்குகின்றது.

எமது நோயாளிகளுக்கு எங்களால் இயன்ற அளவுக்கு உயர்தர கவனிப்பு வழங்குவதன் மூலமும் நேர்மறையான அனுபவத்தை வழங்குவதன் மூலமும் காயத்தால் பாதிக்கப்பட்ட எங்களது நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மீட்டுக் கொடுப்பதற்கு டொரோன்டோ ஹெல்த்கேர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.

இங்கு கிடைக்கும் சிகிச்சைகள்

  • தொழில்முறை புனர்வாழ்வுச் சேவைகள்
  • நமது மருத்துவக் குழுவினரின் வீடு மற்றும் மருத்துவமனை வருகைகள்
  • இலவச ஆலோசனை
  • சிறப்பு மருத்துவர்களிடம் விரைவான பரிந்துரை
  • பேசப்படும் மொழிகள்: கான்டோனீஸ், மண்டாரின், தமிழ், இந்தி, கிரீக், பொலிஷ் மற்றும் பல...
  • எங்களது நோயாளிகளுக்கு இலவச போக்குவரத்து வசதி
  • உங்கள் வசதிக்காக, மாலை நேரங்களிலும் வார இறுதி நாட்களிலும் சேவை உண்டு.

உடல்நலப் பராமரிப்புச் சேவைகள்

  • மோட்டார் வாகன விபத்துச் சிகிச்சை
  • தனிப்பட்ட காயத்துக்கான சிகிச்சை
  • உடல் சிகிச்சை
  • மசாஜ் சிகிச்சை
  • உடலியக்கப் பராமரிப்பு
  • அக்குபஞ்சர் சிகிச்சை
  • லேசர் சிகிச்சை
  • தண்டுவட அழுத்தக்குறைப்பு
  • ஆர்த்தோடிக்ஸ்
  • உளவியல் மதிப்பீடு மற்றும் ஆலோசனை
  • தசை எலும்பு மதிப்பீடு
  • நரம்பு மதிப்பீடு
  • நாள்பட்ட வலிக்கான சிகிச்சை
  • சார்பற்ற மருத்துவ மதிப்பீட்டுச் சேவைகள்

நோய் கண்டறிதல் சேவைகள்

  • எம்ஆர்ஐ (MRI)
  • சிடி (CT) ஸ்கேன்
  • எக்ஸ்-ரே
  • நரம்பு கடத்துதல் ஆய்வுகள்
  • எலும்பு ஸ்கேன்கள்
  • மேற்பரப்பு எலெக்ட்ரோமையோகிராஃபி (EMG)

மோட்டார் வாகன விபத்துச் சிகிச்சை

மோட்டார் வாகன விபத்துச் சிகிச்சை என்பது உடல்சார் அம்சம் மற்றும் உணர்வுசார் அம்சம் ஆகிய இரண்டைப் பொறுத்த வரையிலும், ஒரு நபரின் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியற்ற விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகளில் ஒன்றாகும். உங்களுக்கு மோட்டார் வாகன விபத்தின் காரணமாக காயம் ஏற்பட்டிருந்தால், எங்களது அனுபவமிக்க உடல்நல வல்லுநர்களை கொண்ட அணியும் மிகவும் தகுதிவாய்ந்த ஆதரவு அணியும் உங்களுடைய உடல்நலமும் உங்கள் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் சிறந்த பயிற்சியும் அர்ப்பணிப்பு மனப்பான்மையும் கொண்டுள்ளனர். நீங்கள் உங்களுடைய காயங்களிலிருந்து குணமடைவதற்கும் உங்களுடைய நிலைமை வெற்றிகரமாகத் தீர்க்கப்படுவதை உறுதி செய்வதற்கும் உங்களுக்கு உதவுவதற்குத் தேவைப்படும் சிறந்த மருத்துவ மற்றும் விசாரணை நிபுணர்களை நீங்கள் பெறுவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்வோம். நாங்கள் காப்பீட்டு நடைமுறைகளைப் புரிந்துகொண்டுள்ளோம், மேலும் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதிலும், நீங்கள் சிறப்பாக குணமடைவதற்குத் தேவைப்படும் காப்பீட்டு ஆவணங்கள் மற்றும் சிகிச்சைகளை ஒருங்கிணைப்பதிலும் நாங்கள் உங்களுக்கு உதவ முடியும். நீங்கள் ஏதாவது விபத்தில் சம்பந்தப்பட்டிருந்தால், விபத்தில் நீங்கள் தவறு செய்திருந்தாலோ அல்லது செய்யாவிட்டாலோ காப்பீட்டில் உள்ளடங்கிய சிகிச்சையை / புனர்வாழ்வைப் பெறுவதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது. காப்பீட்டுத் துறையில் எங்களுக்கு உள்ள அனுபவமும் அறிவும் காப்பீட்டுக் கோரிக்கைகளுக்கான மன அழுத்தத்தைப் போக்குவதற்கு உதவி செய்து, எங்களது நோயாளிகள் தங்களுடைய ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வில் கவனம் செலுத்துவதற்கு உதவுகின்றது.

நாள்பட்ட வலிக்கான சிகிச்சை

எங்களது நாள்பட்ட வலிக்கான சிகிச்சைத் திட்டம் நாள்பட்ட வலியின் அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவுகின்றது. மருந்துகள், உளவியல் ஆதரவு, உடல்சார் சிகிச்சை மற்றும் தளர்வு உடற்பயிற்சிகள் ஆகியவற்றைக் கொண்டு நாள்பட்ட வலிக்கு சிகிச்சையளிக்க முடியும். சிகிச்சைகள் பல்துறை சம்பந்தப்பட்டவை ஆகும், மேலும் அவை ஒவ்வொரு நோயாளியின் பிரச்சினைகள் மற்றும் புகார்களுக்கேற்ற சிகிச்சை நடைமுறைகளை உள்ளடக்கியுள்ளன. முடிந்த அளவுக்கு வலி மற்றும் அது தொடர்பான அறிகுறிகளிலிருந்து நிவாரணம் பெறுவதற்காக நாள்பட்ட வலிக்கான உளவியல் மற்றும் உடல்சார் அறிகுறிகள் தீர்க்கப்படுகின்றன. நாள்பட்ட வலியால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களில், முழுமையாக குணமடைவது (முழுமையான வலி தணிப்பு) என்பது இயலாததாகும். அத்தகைய நிகழ்வுகளில் அதன் தீவிரத்தைக் குறைப்பது; வலியால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய வாழ்க்கைச் செயல்பாடுகளைப் பயனுள்ள முறையில் மேற்கொள்ளும் வகையில் வலி மற்றும் அது தொடர்பான அறிகுறிகளின் கடுமையைக் குறைப்பது என்பது எங்களது சிகிச்சை அணியின் இலக்காக உள்ளது.

சார்பற்ற மருத்துவ மதிப்பீட்டுச் சேவைகள்

எங்களது உயர் தகுதிவாய்ந்த மருத்துவப் பணியாளர் சிறப்புச் சிகிச்சைகளில் மருத்துவப் பாதிப்புகள் மற்றும் செயல்பாட்டுத் திறன்களில் சார்பற்ற மதிப்பீடுகளையும் வல்லுநர் கருத்துக்களையும் வழங்குகிறார். பல வருட ஒட்டுமொத்த அனுபத்தின் துணையுடன், எங்களது மதிப்பீட்டாளர்கள் மருத்துவக் கருத்து, நோய் முன்கணிப்பு மற்றும் பொருத்தமான பரிந்துரைகளை வழங்குவதில் மிகுந்த அனுபவம் பெற்றுள்ளனர். நரம்பியல், தசை எலும்பியல், நாள்பட்ட வலி, பல் மருத்துவம், உளவியல், உடலியக்கம் மற்றும் சமூக சேவை ஆகியவற்றில் மதிப்பீடுகள் வழங்கப்படுகின்றன. மேலும், வீட்டுப் பராமரிப்பு மதிப்பீடுகள், வேலையிட மதிப்பீடுகள், செயல்பாட்டுத் திறன்களுக்கான மதிப்பீடுகள் மற்றும் உதவியாளர் பராமரிப்பு மதிப்பீடுகள் ஆகியவற்றையும் நாங்கள் வழங்குகிறோம். மேலும், டொரொன்டோ ஹெல்த்கேர் இன்க். எங்களது கூட்டாளி எம்ஆர்ஐ ஆய்வகங்களுடன் இணைந்து எம்ஆர்ஐ மதிப்பீடுகளுக்கான வசதியையும் வழங்குகின்றது. பெரும்பாலான கோரிக்கைகள் 48 மணிநேரங்களுக்குள் தீர்க்கப்படுகின்றன.